வலிகாமம் தெற்கு பிரதேசசபையில் இடம்பெற்ற உள்ளூராட்சி வார நிகழ்வு..!
உள்ளூராட்சி வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று(16.09.2025) காலை யாழ் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் நடைபெற்றது
வலிகாமம் தெற்கு பிரதேச சபையால் உள்ளூராட்சி வாரம் – 2025
வளமான நாடும் அழகான வாழ்க்கையும்.
இரண்டாம் நாள் செயற்பாடுகள் இன்று (16) முன்னெடுக்கப்பட்டது
இன்று காலை வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் உப அலுவலகத்தில் பொலித்தீன் , பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றல் சிரமதானப் பணிகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள்என்பன சுன்னாகம் நகரப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டன
சுண்ணாகம் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உறுப்பினர்கள் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் சுண்ணாகம் நகர வர்த்தகர்கள் சந்தை வியாபாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்


