காரைதீவு HDO பாலர் பாடசாலையில் இன்றைய தினம் (13/09/2025) கிருஷ்ண ஜெயந்தி விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இவ் விழாவிற்கு காரைதீவு சண்முக மகா வித்தியாலய அதிபர் எஸ்.மணிமாறன் அவர்கள் கலந்து கொண்டார்.
அத்துடன் இந்த பாடசாலை சிறார்கள் கிருஷ்ணர் ராதை வேடம்பூண்டு இவ் விழாவினை அலங்கரித்தனர்.
இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களால் இச் சிறார்களுக்கு கலை நிகழ்வுகளையும் ஒழுங்கமைத்து அரங்கேற்றியதுடன் கிருஷ்ண ஜெயந்தி பூஜை வழிபாடு , அதிதி உரை ,ஆசிரியர்களது உரை என்பன நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது .


