மஹிந்த ராஜபக்ச அனுதாபத்தைப் பெற நாடகம் போடுகிறார்: அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொதுமக்களின் அனுதாபத்தை வெல்லும் வகையில் நாடகங்களை நடத்தி வருவதாக கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி இன்று தெரிவித்தார்.
”தமது உத்தியோகபூர்வ இல்லத்தை காலி செய்ய நேரிட்டதால், தமக்கு வேறு எங்கும் செல்ல இடமில்லை என்று கூறி ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் ராஜபக்சக்கள் அனுதாபத்தைப் பெற முயற்சிக்கின்றனர்” என்று அமைச்சர் கூறினார்.
”ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடு சரியான திசையில் பயணிக்கிறது. இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் நாம் எமது வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளோம்” என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

