வவுனியாவில் உணவகங்களுக்கு அருகில் புகைத்தல் தடை

வவுனியாவில் உணவகங்களுக்கு அருகில் புகைத்தல் தடை

​வவுனியா நகர எல்லைக்குள் உள்ள உணவகங்களுக்கு அருகில் அமைந்துள்ள புகைத்தல் வலயங்களுக்கு வவுனியா நகரசபை நேற்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளது.

​நேற்றைய நகரசபை அமர்வின்போது நகரசபை சுகாதாரக் குழுவின் பரிந்துரையின் பேரில் நகர பிதா கண்டீபன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

​வவுனியாவில் உள்ள பல உணவகங்கள் தங்கள் வளாகங்களின் பின்புறத்தில் சிறிய புகைத்தல் வலயங்களை ஒதுக்கி இருந்த நிலையில், அவை இனிமேல் தடை செய்யப்படும்.

​இதேவேளை, நகரசபை உறுப்பினர் கே. கிருஸ்ணதாஸ் வவுனியா தமிழ் மத்திய கல்லூரிக்கு அருகில், குறிப்பாக பாடசாலை விடும் நேரத்தில் இடம்பெறும் போதைப்பொருள் விற்பனை குறித்து கவலை தெரிவித்தார். இது குறித்து காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகரபிதா உறுதியளித்தார்.

Recommended For You

About the Author: admin