பொலிஸ் அறிக்கைகளுக்கான புதிய கட்டணங்கள் அறிவிப்பு
வெளிநாட்டுப் பயணம் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு பொலிஸ் அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்கான அதிகாரபூர்வமான கட்டணங்களை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின்படி, வெளிநாட்டுப் பயணங்களுக்கான பொலிஸ் சான்றிதழ் அறிக்கையைப் பெறுவதற்கும், அது தொடர்பான நிகழ்நேர சேவைகளுக்கும் 5,000 ரூபா அறவிடப்படும்.
ஒலிபரப்பு அனுமதிப்பத்திரங்களுக்கான கட்டணங்களும் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன:
6 மணி நேரம் வரை – 500 ரூபா
6 மணி முதல் 12 மணி வரை – 1,000 ரூபா
12 மணி நேரத்திற்கு மேல் – 2,000 ரூபா
இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளுக்கான பிராந்திய பொலிஸ் நிலையங்களால் வழங்கப்படும் பொலிஸ் அறிக்கைகளுக்கு 500 ரூபா அறவிடப்படுவதுடன், உள்நாட்டுத் தேவைகளுக்காக பொறுப்பதிகாரியினால் (OIC) வழங்கப்படும் அறிக்கைகளுக்கு 300 ரூபா அறவிடப்படும்.
கூடுதலாக, ஒரு முறைப்பாட்டுப் பிரதியொன்றை பெறுவதற்கு ஒரு பிரதிக்கு 50 ரூபா அறவிடப்படும்.
இந்தக் கட்டணங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் என இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.

