FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி அரசாங்க அதிபருடன் கலந்துரையாடல்..!
சுவிட்சர்லாந்திலிருந்து வருகை தந்த FAIRMED Foundation நிறுவனத்தின் தலைமை அதிகாரி Mr. Fabio Molinari அவர்களுக்கும் அரசாங்க அதிபருக்குமிடையிலான திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (11.09.2025) பி. ப. 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான பல நிகழ்ச்சித் திட்டங்களை FAIRMED நிறுவனம் முன்னெடுத்துவருகின்றது. அந்தவகையில் மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக்குழுக்களை வலுப்படுத்தல், அணுகுவசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், வாழ்வாதாரம், குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், மருத்துவ வசதிகளை வழங்குதல் போன்ற திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் தலைமை அதிகாரி கலந்துரையாடினார். இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் FAIRMED Foundation நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களுக்காக தமது நன்றியினைத் தெரிவித்ததுடன், தீவகப் பகுதியில் மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 09 பிரதேச செயலக பிரிவுகளிலேயே FAIRMED Foundation நிறுவனத்தினால் திட்டங்கள் நடைமுறைப்படுத்திவருவதாகவும் ஏனைய 06 பிரதேச செயலக பிரிவுகளிலும்நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கையினை முன்வைத்தார். இதன் போது அரசாங்க அதிபரின் கோரிக்கையினை சாதகமாக பரிசீலிப்பதாக தலைமை அதிகாரி தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், FAIRMED Foundation நிறுவன இலங்கைக்கான இணைப்பாளர் வைத்திய கலாநிதி நயனி சூரயாராச்சி, சமூகசேவை திணைக்கள மாவட்ட இணைப்பாளர் திரு. தி. உமாசங்கர், மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர் திருமதி கி. தயாபரி, அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் திரு. ந. தயாபரன், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. இ. அமலன், FAIRMED Foundation நிறுவன திட்ட உத்தியோகத்தர் திருமதி. ஞா. பிரியரஜனி கள இணைப்பாளர் திரு. அ. றொணி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.


