“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், வெள்ளை மணல் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மக்கள் நடமாடும் சேவை
“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ், பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தினால் வெள்ளை மணல் கிராம சேவையாளர் பிரிவில் இன்று (11) சிறப்பாக மக்கள் நடமாடும் சேவை நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்வானது பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ந. மதிவண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில், பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற அனைத்து அமைச்சுகளின் மற்றும் திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் பங்கேற்று, தங்களது சேவைகளை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.
இதன் மூலம், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான ஆலோசனைகள், நலத்திட்டங்கள், சமூக சேவைகள் மற்றும் பிற அரசின் அடிப்படைச் சேவைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் எளிதாகப் பெற்றனர்.
அரசாங்க சேவைகளை வேகமாகவும் வெளிப்படையாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முக்கிய மேடையாக இத்தகைய மக்கள் நடமாடும் சேவைகள் அமைகின்றன என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தனர்.


