கிளி. கரைச்சி காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று நடைபெற்றது..!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவின் காணிப் பிணக்குகளை தீர்க்கும் வகையிலான பகுதி நாள் நடமாடும் சேவை நேற்று(09.09.2025) நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களிற்கு காணிப் பிணக்குகள் தொடர்பில் மக்களால் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் குறித்த பகுதி நாள் நடமாடும் சேவை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் பங்கேற்புடன் பிரதேச செயலர் பிரிவுகளில் நடாத்தப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் நேற்றைய தினம் கரைச்சி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த பகுதி நாள் நடமாடும் சேவையில் மக்களால் முன்வைக்கப்பட்ட 22 காணிப் பிணக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இவற்றுள் சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைக்கு அமைவாக 20 காணிப் பிணக்குகளுக்குகள் தீர்மானத்திற்கு கொண்டு வரப்பட்டன.
ஏனைய இரு காணிப் பிணக்குகள் காணி அளவீடுகள், மேலதிக விசாரனைகள் ஊடாக அடுத்த பகுதி நாள் நடமாடும் சேவைக்கு கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பகுதி நாள் நடமாடும் சேவையில் கிளிநொச்சி மாவட்டச் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரும், வடக்கு மாகாண பதில் காணி ஆணையாளருமான அ.சோதிநாதன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) பி. அஜிதா, கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், வடக்கு மாகாண உதவி காணி ஆணையாளர் சிவப்பிரியா சுபாஸ்கரன், காணி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.


