தலைமன்னார் காற்றாலை மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக 27வது நாளாக தொடர் போராட்டம்
தலைமன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைப்பதற்கும், கனிம மணல் அகழ்வு செய்வதற்கும் எதிராக தொடர் போராட்டம் இன்று 27ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மூசலி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்தரிப்புத்துறை கிராம மக்களும் இன்று இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மன்னார் நகர சுற்றுவட்டத்தில் இருந்து மன்னார் மாவட்ட செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாகச் சென்று திட்டங்களுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

