25 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த ஒருவர் கைது
ஹட்டன் காவல்துறையினரால் கடுவெலவைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பலரிடம் இருந்து 25 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
அசர்பைஜானில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் இருந்து 1.2 மில்லியன் ரூபாவை சந்தேகநபர் பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், தொண்டு நிறுவன ஊழியராகப் பலரையும் ஏமாற்றி சமூக ஆர்வலர்களிடம் இருந்து பல்வேறு தொண்டு நிறுவனங்களின் பெயரில் வங்கிக் கணக்குகளில் பணத்தைப் வைப்புச் செய்யுமாறு கேட்டுள்ளார்.
ஹட்டன் பகுதியில் மட்டும் சந்தேகநபர் சுமார் 25 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சந்தேகநபரிடம் ஏமாற்றப்பட்ட எவராவது இருந்தால், ஹட்டன் குற்றப் புலனாய்வுப் பிரிவின் 071-6907033 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

