ரணிலுக்காக குரல் கொடுத்த சுமந்திரன் ஏன் தமிழ் அரசியல் கைதிகளுக்காக குரல் கொடுக்கவில்லை..?

ரணிலுக்காக பாடுபடும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தமிழ் அரசியர் கைதிகளின் விடுதலைக்கு ஏன் முயற்சிக்கவில்லை என மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திபொன்றின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்ட போது, கண்டனம் தெரிவித்த, எம்.ஏ. சுமந்திரன் தமிழ் கைதிகளின் விடுதலைக்காக முயற்சிக்காது விலாங்கு மீன் போன்றே செயற்படுகின்றார்.

முன்னைய காலத்தில் ரணிலிடம் தனது சுயநலத்தையும் பெற்றுக் கொண்ட பணப்பெட்டிக்காகான விசுவாசத்தையும் காட்டுகின்றது.

நல்லாட்சி காலத்தில் ரணிலுக்கு முண்டு கொடுத்து ஆட்சியில் நிழல் ஆட்சியாளர்களாக இருந்த இவர்கள் அன்றும் ரணிலைக் கொண்டு தமது தேவைகளையே நிவர்த்தி செய்து இலட்சாதிபதியாகினர்.

தற்போது ரணில் கைதானவுடன் அனைத்துக் கட்சியும் ஒன்று சேர்ந்து விடுதலைக்காக போராடுகின்றனர்.

இது ஊழல்வாதிகள் தமது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே இருக்கின்றது.

அந்தவகையில் ரணிலின் விடுவிப்பில் அவரது நோயின் தன்மையே தாக்கத்தை செலுத்தியது.

எனவே மக்களின் நலன்களையும் அவர்களது சொத்துக்களையும் யார் துஷ்பிரயோகம் செய்தாலும் அவர்களுக்கு இந்த ரணிலின் கைது பாடமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin