பரவி பாஞ்சான் குள புனரமைப்பு தொடர்பிலான கள நடவடிக்கைகள்..!

திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் முள்ளிப்பொத்தானை பரவி பாஞ்சான் குள புனரமைப்பு தொடர்பிலான கள நடவடிக்கைகள் இன்று (27) இடம்பெற்றன.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையிலான கள நடவடிக்கையில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன, நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த குள புனரமைப்பு அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டு நடவடிக்கைகள் என பல விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டன. இக்குளத்தின் மூலம் விவசாயிகள், நன்னீர் மீன் பிடி தொழிலாளர்கள் என பலரும் நன்மையடைகின்றனர்.

இதில் விவசாய சம்மேளன பிரதிநிதிகள், நன்னீர் மீன்பிடியாளர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
குறித்த குள அபிவிருத்தி தொடர்பிலான நடவடிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன கேட்டறிந்து கொண்டார்.

Recommended For You

About the Author: admin