தென்மராட்சியில் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம்..!

தென்மராட்சியில் சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளை சந்தைப்படுத்த இட ஒதுக்கீடு அவசியம்..!

நகரசபை உறுப்பினர் பவுலினா சுபோதினி

அறுபது கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட தென்மராட்சிப் பிரதேசத்தில் பெண் தலைமை மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுடைய உள்ளூர் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான தளம் இன்மையால் அவர்கள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த பல்வேறு இடர்களை எதிர்நோக்குவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் திருமதி பவுலினா சுபோதினி தயாளரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

 

சாவகச்சேரிப் பொதுச்சந்தை வளாகத்தில் நகரசபையால் வர்த்தக நடவடிக்கைக்காக புதிதாக கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இருப்பினும் குறித்த கட்டடத்தில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட வர்த்தகர்கள் பின்னடிக்கின்றனர்.

எனவே வர்த்தகர்கள் அதில் வியாபார நடவடிக்கையில் ஈடுபடத் தவறும் பட்சத்தில் உடனடியாக அதனை தென்மராட்சியில் உள்ள உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுடைய சந்தைப்படுத்தல் நிலையமாக மாற்ற சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தென்மராட்சில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் தளம் இன்மையால் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை சந்தைப்படுத்த யாழ்ப்பாணம் மற்றும் திருநெல்வேலி நோக்கி சென்று சந்தைப்படுத்த வேண்டியுள்ளது.

சாவகச்சேரியில் சந்தைப்படுத்தல் நிலையம் காணப்படும் பட்சத்தில் அவர்கள் பொருளாதார ரீதியாகவும் முன்னேற முடியும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Recommended For You

About the Author: admin