வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் சம்பளம் இல்லை: தபால் மாஅதிபர் அறிவிப்பு
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு இந்த மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தபால் மாஅதிபர் ருவன் சத்தகுமார அறிவித்துள்ளார்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மாத சம்பளத்தைப் பெற விரும்பினால் உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த முடிவு குறித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தபால் சேவைக்கு சுமார் 140 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“சம்பளம் வழங்குவதற்கு திறைசேரியின் நிதி ஒதுக்கீடுகள் தேவை. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுபவர்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பணிக்குத் திரும்புபவர்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும்” என்று தபால் மாஅதிபர் குறிப்பிட்டார்.

