சட்டவிரோத குடியேற்ற வழக்கில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேக்கு பிடியாணை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு, குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் (MC) பிடியாணை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு நேற்று (21) கொழும்பு தலைமை நீதிவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறியதாக அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

