36 பேருக்கு இரு வாரத்தில் கண்புரை சிகிச்சை (Cataracts) நடைபெறும்..! அரசாங்க அதிபர் தெரிவிப்பு 

நடமாடும் சேவை மூலம் இனங்காணப்பட்டவர்களில் முதற்கட்டமாக 36 பேருக்கு இரு வாரத்தில் கண்புரை சிகிச்சை (Cataracts) நடைபெறும்..!

அரசாங்க அதிபர் தெரிவிப்பு

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ் பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயத்திலும் மற்றும் உடுவில் பிரதேச செயலகத்திலும் முறையே கடந்த 14 ஆம் திகதி மற்றும் 15 ஆம் திகதி நடைபெற்ற விசேட நடமாடும் சேவையில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுடன் நேற்றைய தினம் (19.08.2025) பி. ப 4.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

 

இதன்போது போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், பருத்தித்துறை மற்றும் உடுவிலில் நடைபெற்ற விசேட நடமாடும் சேவைகளானது வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டு நடமாடும் சேவையிலும் எதிர்பார்த்த மக்களை விட அதிகமானோர் பங்கேற்றனர் எனவும், அவ் நடமாடும் சேவைகளில் கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலக பிரதேச செயலக அனைத்துத் தர உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், மேற்படி நடமாடும் சேவைகளில் குறிப்பாக கண் பரிசோதனை, ஆட்பதிவுச் சேவை, மருத்துவ பரிசோதனைச் சேவை, பிறப்பு இறப்பு பதிவுச் சேவை, மோட்டார் வாகன போக்குவரத்து சேவை மற்றும் ஓய்வூதியச் சேவைக்கே அதிக பொது மக்கள் பங்குபற்றினார்கள் எனவும், பொது மக்களின் மேற்படி சேவைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பிரதேச செயலக ரீதியாக நடமாடும் சேவை நடாத்தவுள்ளதாகவும், அந்த வகையில் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி சங்கானை பிரதேச செயலக த்திலும், 30 ஆம் திகதி காரைநகர் பிரதேச செயலக த்திலும் மாவட்டச் செயலகத்தினால் நடமாடும் சேவை பிரதேச செயலக ஒத்துழைப்புடன் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் கண் பரிசோதனையில் இனங்காணப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக 36 பேருக்கு கண்புரை சிகிச்சை இரண்டு வாரத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மொது மக்களுக்கான சேவையில் அனைவரதும் ஒத்துழைப்புக்களை வினைத்திறனாக வழங்குமாறும் கேட்டுக் கொண்டார்.

 

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு பா. ஜெயகரன் உள்ளிட்ட மாவட்டச் செயலகம் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: admin