1990ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி, வீரமுனையில் நிகழ்ந்த படுகொலை தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதியப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி, வீரமுனையில் நிகழ்ந்த படுகொலை தமிழர் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதியப்பட்டுள்ளது.

ஆயுதமில்லாத பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட அந்த தாக்குதல், மனிதநேயத்தின் எல்லைகளை மீறிய ஒரு கொடூரச் சம்பவமாகும். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் யாரும் விலக்கப்படவில்லை. அந்த இரவில், மனித உரிமைகள் தூக்கி எறியப்பட்டன.

இந்த நிகழ்வை நினைவுகூறும் வகையிலும் வரலாற்றுப் பிழையை மறக்காமல் வைக்கும் முகமாகவும் எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் நிகழாதவாறு உறுதி செய்யும் வகையிலும் நீதிக்கும் உண்மைக்கும் தொடர்ந்து போராட வேண்டும் என்பதையும் நினைவூட்டும் வண்ணமாக உயிரிழந்தவர்களின் தியாகத்தினை வெளிக்கொணரும் வகையில் இவ்வாறான நினைவேந்தல் வருடாவருடம் நிகழ்த்துகின்றனர்.

அந்த வகையில் இவ்வருடம் நடைபெற்ற நினைவஞ்சலியின் போது தமிழரசு கட்சியின் அம்பாரை, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், தவிசாளர்கள் உட்பட முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: admin