முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

எண்ணிம படுத்தப்பட்ட (Digitalise National Birth Certificate) தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் முல்லைத்தீவு மாவட்ட அங்குரார்பண வைபவம் இன்றைய தினம்(12.08.2025) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற நிகழ்வில், மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன்(நிர்வாகம்), மேலதிக மாவட்ட செயலாளர் திரு.சி.ஜெயகாந், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பிரதிப் பதிவாளர் நாயகம் திரு ப.பிரபாகர் அவர்கள், பிரதிப் பதிவாளர் நாயகம் ஆனந்தி சசிதரன் அவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மேலதிக கணிப்பதிவாளர், மேலதிக மாவட்ட பதிவாளர் ,
இலங்கை வங்கியின் முகாமையாளர் ,

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 10 குழந்தைகளுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin