கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட இளைஞன்; சடலமாக மீட்பு
முத்தையன்கட்டு இராணுவ முகாமில் இருந்து இரும்புக் கழிவுகளை எடுத்துத் தருவதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட நான்கு இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தப்பி ஓடிய நிலையில், காணாமல்போனதாகவும், பின்னர் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முத்தையன்கட்டு இராணுவ முகாம் தற்போது அகற்றப்பட்டு வருவதால், அங்கிருந்த இரும்புக் கழிவுகளை சேகரிப்பதற்காக இளைஞர்கள் சென்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

