களுத்துறை ரயில் விபத்து: ரயில்வே கடவையில் ரயில் மோதி பெண் படுகாயம்
இன்று (9) காலை மருதானையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில், அளுத்கம ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள சீலானந்த வீதியில் உள்ள ரயில்வே கடவையில் வைத்து மினி ரக வேன் ஒன்றுடன் மோதியது.
இந்த விபத்தில் வேனை ஓட்டிச் சென்ற பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

