கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சாவகச்சேரி கோவில் குடியிருப்பு பகுதி துப்பரவு செய்யப்பட்டது..!
கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் 29/07 செவ்வாய்க்கிழமை காலை சாவகச்சேரி கோவிற்குடியிருப்பு கடற்கரையோரங்கள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
இதன்போது லிகோரியார் தேவாலயத்தினை அண்டிய கடற்கரையோரத்தில் இருந்து கச்சாய் வரை துப்பரவு செய்யப்பட்டு பிளாஸ்டிக்,பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகள் நகரசபை உழவியந்திரம் ஊடாக அப்புறப்படுத்தப்பட்டிருந்தன.
தென்மராட்சி பிரதேச செயலகம்,இராணுவம் மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து இத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருந்தனர்.
துப்பரவுப் பணியில் கோவிற்குடியிருப்பு கிராமத்தின் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சாவகச்சேரி நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் உட்பட்ட சுகாதாரப் பிரிவினர்,இராணுவ வீரர்கள்,பொது அமைப்புக்கள்,இளைஞர் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.


