ஜனாதிபதி நிதியத்தின் மூலம் உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
ஜனாதிபதி நிதியத்தினால் அமுல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் கிழக்கு மாகாண நிகழ்வு நாளை (27) நடைபெறவுள்ளது.
மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் முற்பகல் 9.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு நிதி உதவி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மாகாண மட்டத்தில் அமுல்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டம் அண்மையில் வட மாகாணத்தில் ஆரம்பமானது.
இதன் முதலாவது நிகழ்வு கிளிநொச்சியிலும், இரண்டாவது நிகழ்வு தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு மாத்தறை மாவட்டத்திலும் நடத்தப்பட்டன.

