குதிரைகளின் சண்டையில் முடச்சக்கர வண்டியில் சிக்கிய குதிரை: இருவர் படுகாயம்!
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இரு குதிரைகளுக்கு இடையே நடந்த மோதல் பெரும் சேதத்தையும், கடுமையான காயங்களையும் ஏற்படுத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதன்கிழமை அன்று, இரண்டு குதிரைகள் ஆக்ரோஷமாக சண்டையிடத் தொடங்கின. பொது மக்கள் அவற்றை விரட்ட முயன்றும் பலனில்லை. அவற்றின் சண்டை தீவிரமடைந்து, குதிரைகளில் ஒன்று ஒரு முச்சக்கர வண்டிக்குள் குதித்தது. இதில், முச்சக்கர வண்டி உள்ளே இருந்த இருவர் பலத்த காயமடைந்தனர். சுமார் 20 நிமிடங்கள் குதிரை சிக்கிக்கொண்டது. அதன்பின்னர், அதை வெளியே கொண்டுவர பெரும் சிரமப்பட்டனர்.

