யாழ்ப்பாணம் வாள்வெட்டு: ஒருவர் மரணம்
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் உள்ள தாவடி மதுபானக் கடைக்கு முன்னால் நேற்று (ஜூலை 23) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய், சுதுமலை மத்தியைச் சேர்ந்த 51 வயதுடைய நேசராஜன் சர்வேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார். வாள்வெட்டில் பலத்த காயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தாவடி மதுபானக் கடைக்கு அருகில் அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளானவர் வயிறு மற்றும் இடது கையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

