இளவயது திருமணத்தால் ஏற்படும் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் கருத்தரங்கு..!
இளவயது திருமணத்தினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கருத்தரங்கு நேற்று(21.07.2025) பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கோவில்வயல் கிராமத்தில் நடைபெற்றது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கோவில்வயல் கிராம மக்களுக்கு “இளவயது திருமணத்தினால் ஏற்படும் தாக்கங்கள்” என்ற தொனிப்பொருளில் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
கோவில்வயல் கிராம அலுவலர் பிரிவின் குடும்ப நல உத்தியோகத்தர் வளவாளராகக் கலந்து கொண்டார்.
இதன்போது இளவயது திருமணத்தினால் உடல்நலம், சமூக மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகள், சட்ட நடவடிக்கைகள், விவாகப்பதிவு மற்றும் இளவயது திருமணங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோவில்வயல் கிராம அலுவலர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், JSAC நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


