அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி பயிற்சி நெறி ஆரம்பம்..!
மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் மேற்பார்வையில் பழைய மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள கிழக்கு மாகாண மொழிகள் மத்திய நிலையத்தல் (22) இடம் பெற்றது.
அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் இரண்டாம் மொழி பயிற்சி நெறி நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றன.
உத்தியோகத்தர்களின் இரண்டாம் மொழியாற்றலை அதிகரிப்பதுடன் அலுவலக கடமையில் ஈடுபடும் போது தொடர்பாடலை மேம்படுத்துவதாக இக் கற்கை நெறி அமையவுள்ளது.
150 மணித்தியாலங்களைக் உள்ளடக்கிய இக்கற்கை நெறியை அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இக்கற்கை நெறியினை அரச கரும மொழிகள் திணைக்களத்தின் வளவாளரான என். துஜோகாந்த் வளவாண்மை மேற்கொண்டு வருகின்றார்.
இந்த நிகழ்விற்கு அரச கரும மொழிகள் திணைக்கள இரண்டாம்மொழி கற்கையின் இணைப்பாளர் வி.சந்திரகுமார், திருமதி ஆர்.சுபாசினி, மு.ஷாருகாசன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


