தையிட்டி விகாரை அருகே மற்றுமோர் சட்ட விரோத கட்டிடம்.
தையிட்டி சட்ட விரோத விகாரை வளாகத்தில் மற்றுமோர் கட்டிடம. கட்ட ஏறபாடு இடம்பெறும் இடத்தை மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தையிட்டி சட்ட விரோத வளாகத்தில் மற்றுமோர் அத்து மீறிய கட்டிடம் அமைக்கப்படுவதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து சக உறுப்பினர்கள் சகிதம. சம பவ இடத்திற்கு தவிசாளர் சென்றிருந்தார்.
பிரதேச சபையின் தவிசாளர் சென்ற சமயம் அங்கே மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் மற்றும் அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் அப்பகுதியில் நிற்பதும் அவதானிக்கப்பட்டதாகவும் இந்த சட்ட விரோத கட்டிடம் தனியாரின் காணிக்குள் வருவதனால் அந்த நிலத்தின் உரிமையாளர் ஊடாக நீதிமன்றை நாடவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபனைத் தொடர்புகொண்டு கேட்டபோது ,
தையிட்டி விகாரை விடுவிப்புத் தொடர்பில் பௌத்த பிக்குவுடன் கலந்துரையாடுவதற்காகவே சென்றதாக பதிலளித்தார்


