யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றது..!
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர், இணைத் தலைவர் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ம.பிரதீபன், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைத் தவிசாளர்கள், அரச திணைக்கள பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படைகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது மாவட்டத்தில் உள்ள பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எட்டப்பட்டது.


