சுஹைல் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்..! 

சுஹைல் பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்..!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சுஹைல் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று (15.07.2025) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது சுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) அநுராத ஹேரத், ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு நீதவானைக் கோரும் சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதவானிடம் சமர்ப்பித்தார்.

அதனை கருத்திற்கொண்ட கல்கிஸ்ஸை நீதிவான், ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு பொலிஸாரினை பணித்தார்.

 

இவ்வழக்கில் ஸுஹைல் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கீத்ம பர்னாந்து, சட்டத்தரணிகள் இல்ஹாம் ஹஸனலி, அஷ்ரப் முக்தார் மற்றும் பெஹ்ஷாத் ஆகியோர் ஆஜராகினர்.

Recommended For You

About the Author: admin