சாவகச்சேரி நகர்ப்பகுதியில் வெடி பொருள் அடையாளம் காணப்பட்டது..!
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாவகச்சேரி நகர்ப் பகுதியை அண்மித்துள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 14.07.2025 திங்கட்கிழமை பிற்பகல் வெடிபொருள் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
காணித் துப்பரவுப் பணியின் போது மேற்படி வெடிபொருள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அது தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில்
பொலிஸார் மேற்படி வெடிபொருளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

