அஞ்சல் ஊழியர்கள் நாளை முதல் மேலதிக நேர வேலைநிறுத்தம்: நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு அறிவிப்பு
நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் மேலதிக நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அஞ்சல் தொழிற்சங்க முன்னணி அறிவித்துள்ளது. இந்த வேலைநிறுத்தம் இன்று ஜூலை 15 நள்ளிரவு 12 மணி முதல் (ஜூலை 15, 2025) அமுலுக்கு வரும்.
2016 ஆம் ஆண்டு முதல் ஆட்சேர்ப்பு முறைகள் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை எனக் குற்றம் சாட்டியே இந்த முடிவை தொழிற்சங்கங்கள் எடுத்துள்ளன. உரிய காலக்கெடுவுக்குள் சரியான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததே இந்தப் போராட்டத்திற்கு காரணம் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

