கோவிலுக்கெனகொண்டுசென்று ஒவ்வொருவருடமும் விற்கப்படும் மணல்
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் விளையாட்டு கழகம் ஒன்றின் அபிவிருத்திக்காக குறித்த மைதானத்தை சுற்றி காணப்படும் பெருந்தொகையான மணலை அண்ணளவாக 40 டிப்பர்கள்,வெளி இடத்திற்கு விற்க முடிவு
இதனை உறுதிப்படுத்துவதற்காகவும் மக்களுடன் கலந்துரையாடுவதற்காகவும் பிரதேச சபை தவிசாளர் உட்பட்ட அதிகாரிகள் பலர் அங்கு சென்றுள்ளதை எம்மால் சுயாதீனமாக உறுதிப்படுத்த முடிகின்றது
இதற்கு நாகர்கோவில் மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை காணப்படுவதுடன், குறித்த கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
வெளி இடத்திற்கு வடமராட்சி கிழக்கின் நிலத்தை விற்பது வரலாற்றுத் துரோகமாகும்.நிலம் அழிந்துபோனால் இனம் அழிந்து போகும்
அற்ப ரொட்டித் துண்டுகளுக்காக இனத்தை, வளத்தை விற்பது வரலாற்று பெரும்துயரமாகும் சொந்தங்களே
கோவில் ஒன்றிற்கு ஒவ்வொரு வருடமும் 150 லோட் மணல் ஏற்றப்படுகின்றது///அந்த 150 லோட் மணலும் எப்படி ஒவ்வொரு வருடமும் கோவிலில் இருந்து காணாமல் போகின்றது.கோவிலில் 150 லோட் மணலும் பயன்படுத்தப்படுகின்றதா? எத்தனை லோட் மணல் விற்கப்படுகின்றது?இதற்கு பின் பெரிய மண் மாபியா செயல்படுவதாகவே மக்கள் கூறுகின்றனர்.யாராவது நடுநிலை வாதிகள் இதற்கு பதில் கூற முடியுமா?
கோவிலின் தேவையை அடிப்படையாக வைத்து மாபெரும் மணல் கொள்ளை இடம்பெறுவதாகவே மக்கள் கூறுகின்றனர்.
வடமராட்சி கிழக்கில் இருந்து மணல் வெளி இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அரசியல்வாதிகள் அனைவரையும் வடமராட்சி கிழக்கில் தோற்கடிப்போம்
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்
மரியசீலன் திலைக்ஸ்
சுயாதீன ஊடகவியலாளர்
14/07/2025

