நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு மண் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு மண் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்..!

நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு மண் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் அம்பனில் இன்று(12.07.2025) காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகர் திரு .கு பிரபாகமூர்த்தி தலைமையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் அம்பன் கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் இடையே இடம்பெற்றது

இவ் கலந்துரையாடலில் அம்பன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் அம்மன் கிராம மக்கள் மத்தியில் பிரதேச செயலக உத்தியோதர்களால் மற்றும் பிரதேச செயலகரால் இந்த முறை நல்லூர் திருவிழாவிற்கு மண் கொடுப்பது தொடர்பாக வினவப்பட்டது இதன் போது அம்மன் கிராம மக்கள் மறுப்பினை தெரிவித்த போதும் பிரதேச செயலக உத்தியோதரால் அம்மன் கிராம மக்களுக்கு ஒரு நாள் முழுவதும் சிந்தித்து முடிவெடுக்குமாறு கூறப்பட்டது

இதன் போது கிராம மக்கள் கருத்து தெரிவிக்கையில் தாம் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களுக்காக மண் கொடுப்பதாகவும் எமது பிரதேசத்தில் மண் பற்றாக்குறை ஏற்படக்கூடிய சாத்திய கூறு உள்ளதாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறு மண் கொடுப்பதை தாம் நிறுத்துவதாகவும் தமது கருத்துக்களை முன் வைத்துள்ளனர்

ஆனாலும் இந்த முறை மண் கொடுப்பது தொடர்பாக தாம் யோசித்து முடிவு சொல்வதாக பிரதேச செயலரிடம் கூறியுள்ளனர்

இவ் விசேட கலந்துரையாடலில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளரும் மற்றும் 8ம் வட்டார உறுப்பினரும் கலந்து கொண்டனர்

மக்களுக்கிடையிலான கலந்துரையாடலின் பின் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் மற்றும் வட்டார உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

Recommended For You

About the Author: admin