சாவகச்சேரி-கோவிற்குடியிருப்புக் கிராமத்தில் தேவைப்பாடுடைய குடும்பம் ஒன்றின் கோரிக்கைக்கு அமைவாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் கு.பிரணவராசாவால் 11/07 வெள்ளிக்கிழமை ஒரு தொகுதி கூரை சீற்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குரங்கின் அட்டகாசம் காரணமாக சேதமடைந்த வீட்டின் கூரைப் பகுதியை திருத்தும் முகமாகவே மேற்படி உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தென்மராட்சிப் பிரதேசத்தில் குரங்கின் தொல்லை காரணமாக பெருமளவான விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருப்பதுடன்-அனேகமானவர்களுடைய உடைமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
தென்மராட்சியில் 42ஆயிரம் குரங்குகள் காணப்படுவதாக அண்மையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் ஊடாக கண்டறியப்பட்டுள்ள போதிலும் இதுவரை அதனைக் கட்டுப்படுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.
மாறாக வாயுத் துப்பாக்கிகள் மாத்திரமே குறிப்பிட்டளவு வழங்கப்படுகின்றன.இருப்பினும் அவற்றின் ஊடாக குரங்குகளை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

