இலவசமாக பிரித்தானியாவில் படிக்க விரும்புவோருக்கு ஓர் வாய்ப்பு..!

பிரித்தானியாவின் சீவனிங் (Chevening) கல்வி புலமைப் பரிசில் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் அறிவித்துள்ளது.

தங்களது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த கல்வி புலமைப் பரிசிலுக்கான விண்ணப்பங்கள் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 முதல் ஒக்டோபர் 7 வரை ஏற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை தயாரிக்கத் தொடங்க வேண்டும் என்றும் தூதரகம் நினைவூட்டியுள்ளது.

சீவனிங் கல்வி புலமைப் பரிசில் என்பது, முழுமையாக நிதியுதவி செய்யப்படும் திட்டமாகும். இதன் மூலம் மாணவர்கள் ஐக்கிய இராச்சியத்தின் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும், எதுவேனும் ஒரு முதுநிலை (Master’s) படிப்பை மேற்கொள்ள முடியும்.

Recommended For You

About the Author: admin