சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு..!
சட்டவிரோத மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் மீது பொலிஸார் ஐந்து தடவை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பியோடியுள்ளதாக எமது பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சட்டவிரோத மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை பொலிஸார் மறிக்க முற்பட்டபோது, சாரதி அதை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தியுள்ளார்.
பரவிப்பாஞ்சான் வீதியூடாக செல்ல முற்பட்ட குறித்த டிப்பர் வாகனத்தை துரத்திச்சென்று பொலிஸாரால் ஐந்து தடவைகள் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிப்பர் வாகனம் வீதியில் மணலை கொட்டியபடி தப்பிச்சென்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

