எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பான தமது நிலைப்பாட்டை சீனாவிடம் மீண்டும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர், சீன பாதுகாப்பு அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா தம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், நடத்தப்படும் ‘ஒபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
அதேநேரம், இந்தியாவின் இந்த அசைக்க முடியாத உறுதியை அண்டைய நாடுகள் கவனத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

