தமிழகத்திற்குப் பெருமை! பத்ம விருதுகள் 2025: 13 தமிழர்களுக்குக் கௌரவம்! 

தமிழகத்திற்குப் பெருமை! பத்ம விருதுகள் 2025: 13 தமிழர்களுக்குக் கௌரவம்!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் (2025) குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த 13 ஆளுமைகள் (3 பத்ம பூஷண் மற்றும் 10 பத்ம ஸ்ரீ) இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

 

தமிழகத்தின் கலை, விளையாட்டு, தொழில் மற்றும் சமூகப் பணிகளில் முத்திரை பதித்த 13 சாதனையாளர்களுக்கு இந்த ஆண்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

🌟 தமிழகத்திலிருந்து 3 முக்கிய ஆளுமைகள் இந்த உயரிய விருதைப் பெறுகின்றனர்:

 

அஜித் குமார் (S. Ajith Kumar) – கலை (திரைத்துறை & மோட்டார் ஸ்போர்ட்ஸ்) ஷோபனா சந்திரகுமார் (Shobana) – கலை (பரதநாட்டியம் & திரைத்துறை) நல்லி குப்புசாமி செட்டி – வர்த்தகம் மற்றும் தொழில் துறை.

 

✨ பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 10 தமிழர்களுக்குப் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது:

 

ஆர். அஸ்வின் (R. Ashwin) – விளையாட்டு (கிரிக்கெட்)கே. தாமோதரன் (Chef Damu) – சமையல் கலைஆர்.ஜி. சந்திரமோகன் – வர்த்தகம் மற்றும் தொழில் (ஹட்சன் அக்ரோ) குருவாயூர் துரை – கலை (மிருதங்கம்) லட்சுமிபதி இராமசுப்பையர் – இலக்கியம் மற்றும் கல்வி (பத்திரிகையியல்) எம்.டி. ஸ்ரீநிவாஸ் – அறிவியல் மற்றும் பொறியியல் புரிசை கண்ணப்ப சம்பந்தன் – கலை (தெருக்கூத்து) வேலு ஆசான் – கலை (சிலம்பம்) ராதாகிருஷ்ணன் தேவசேனபதி – கலை (சிற்பக்கலை) சீனி விஸ்வநாதன் – இலக்கியம் மற்றும் கல்வி (பாரதியியல் ஆய்வாளர்)

கேரள முன்னாள் முதல்வரும், மறைந்த மார்க்சிஸ்ட் கட்சி தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன், பிரபல பாலிவுட் நடிகர் மறைந்த தர்மேந்திரா, கேரளாவை சேர்ந்த கே.டி. தாமஸ், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த என்.ராஜம், கேரளாவை சேர்ந்த நாராயணனுக்கும் பத்ம விபூஷன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பத்ம பூஷண் விருது மலையாள நடிகர் மம்மூட்டி மற்றும் பொலிவுட் பின்னணிப் பாடகி அல்கா யாக்னிக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகர் மாதவன், பெங்காலி ஜாம்பவான் புரோசென்ஜித் சாட்டர்ஜி, மூத்த தொலைக்காட்சி, திரைப்பட நடிகர் சதீஷ் ஷா (மறைவுக்குப் பின்) ஆகியோருக்குப் பத்மஸ்ரீ வழங்கப்படுகிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தமிழகத்திற்குப் அதிகப்படியான விருதுகள் கிடைத்துள்ளது மாநிலத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக, கலை மற்றும் விளையாட்டுத் துறையில் உலகளவில் முத்திரை பதித்த அஜித்குமார் மற்றும் அஸ்வின் போன்றவர்களுக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin