சாவகச்சேரி பகுதியில் திருட்டுபோனபொருட்களுடன் சந்தேகநபர் கைது..!
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் களவாடப்பட்ட 4 மோட்டர்களுடன் இரண்டு சந்தேக நபர்களை சாவகச்சேரிப் பொலிஸார் 27/06 கைது செய்துள்ளனர்.
பாடசாலை, ஆலயம்,வீடு என மூன்று இடங்களில் தண்ணீர் மோட்டர்கள் திருடப்பட்டுள்ளதாக உரிமையாளர்களால் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி பொலிஸார் சரசாலை மற்றும் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இரண்டு சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டதில் சரசாலை காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4மோட்டர்களையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

