சந்நிதியான் ஆச்சிரம ஆன்மீக மலரான ஞானச்சுடர் 330 ஆவது மலர் வெளியீடும், கௌரவிப்பு நிகழ்வும்..!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் மாதாந்தம் வெளியிடப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 330. வது மலர் வெளியீடு சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில் காலை 10:30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.
பஞ்ச புராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில்
வெளியீட்டுரையினை -ஆசிரியர் ச.வாகீசன் அவர்களும்,
மதிப்பீட்டுரையினை –
பாடசை அதிபர் க.கைலைநாதன்
அவர்களும் நிகழ்த்தினர். அதனை தொடர்ந்து சிறப்பு
பிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பினரால் கொழும்பு அருங்காட்சியகத்தின கேட்போர் கூடத்தில் வைத்து,
தேசாபிமானி என்னும் விருதும், மனித உரிமைகளிற்கான
மாகாண இயக்குனர் என்ற பதவி நிலையினையும் வழங்கி மதிப்பளிக்கப்பட்ட சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையினரால் கௌரவிக்கப்பட்டனர்.
உதவிகளாக,
சங்கானை பிரதேச வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக,
நரம்பியல் புனருத்தாபன பிரிவுக்குரிய பக்கவாத நோயாளிகளுக்கான சிகிச்சை இயன் மருத்துவருக்குரிய ஆனி மாத கொடுப்பனவு ரூபா 70,000 நிதி வழங்கிவைக்கப்பட்டது.


