நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரிப் பெருவிழா

நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரிப் பெருவிழா

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் பகுதியில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில், மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்கு காலப் பூசைகளும் விசேட அபிஷேகங்களும் நடைபெற்றன.

மாலை முதல் அதிகாலை வரை தொடர்ச்சியாக நான்கு காலப் பூசைகள் நடைபெற்றன.

ஒவ்வொரு காலத்திலும் திரவியங்கள், பால் மற்றும் இளநீர் கொண்டு விசேட அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

“சிவ சிவ” எனும் நாமம் முழங்க நூற்றுக்கணக்கான அடியார்கள் ஆலயத்தில் குழுமி, இரவு முழுவதும் கண்விழித்து விரதமிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

பூசைகளுக்கு இணையாகத் தேவாரப் பாராயணங்கள், பக்திப் பாடல்கள் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் நடைபெற்றன

சிவபெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாகத் தோன்றிய இந்நாளில், நல்லூர் சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகள் பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியையும் அருளையும் வழங்கியது. குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் எனப் பலரும் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Recommended For You

About the Author: admin