பிரித்தானியாவுக்குள் தலிபான்கள் ஊடுருவி இருக்கலாம் – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தேகம்!

பிரித்தானியாவுக்குள் தலிபான்கள் ஊடுருவி இருக்கலாம் – முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தேகம்!

காபூலில் (Kabul) இருந்து வெளியேற்றப்பட்ட ஆப்கானிஸ்தானியர்களுடன் (Afghansitan) தலிபான் (Taliban) போராளிகளும் பிரித்தானியாவுக்குள் (Britain) ஊடுருவி இருக்கலாம் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் தலிபான்களிடம் வீழ்ச்சியடைந்த பிறகு பிரித்தானியாவுக்குள் வந்தவர்களை சரியாக கண்காணிக்க முடியாமல் போனதால் தலிபான்கள் ஊடுருவி இருக்கலாம் என்று சர் பென் வாலஸ் (Sir Ben Wallace) கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தரவு கசிவு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக காமன்ஸ் பாதுகாப்பு குழுவில் (Commons defence committee) சாட்சியம் அளித்தபோது அவர் இவ்வாறு தகவல் தெரிவித்தார்.

மிகவும் விலையுயர்ந்த மின்னஞ்சல் என குறிப்பிடப்படும் ஆப்கானிஸ்தானியர்களின் தரவு கசிந்ததால் அவர்களை தலிபான்களிடமிருந்து காப்பாற்ற பிரித்தானிய அரசு 7 பில்லியன் பவுண்டுகள் 5 ஆண்டுகளில் செலவிட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை சர் பென்னிடம் கேள்வி எழுப்பிய ஸ்பெல்தோர்னுக்கான (Spelthorne) பாராளுமன்ற உறுப்பினர் லிங்கன் ஜோப் (Lincoln Jopp) தலிபான்கள் யாரையாவது பிரித்தானியாவுக்குள் அனுமதித்து இருக்கிறீர்களா என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த சர் பென் பெரிய அளவில் மக்களை வெளியேற்றியபோது சில தவறுகள் நடந்திருக்கலாம். ஆனால் அனைவரையும் கண்காணிக்க முயற்சி செய்தோம். நான் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது ஆப்கானிஸ்தானுக்கான அணுகுமுறை (Afghanistan Response Route) சரியாக இருந்தது. நான் விலகிய பிறகு ஆப்கானிஸ்தானுக்கான மீள்குடியேற்ற உதவி கொள்கை (Afghan Relocations and Assistance Policy) எப்படி மாறியது என்று எனக்கு தெரியாது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா (America) தனது படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப் பெற்ற பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர்.

பிரிட்பிரித்தானிய டன் அரசுடன் பணியாற்றிய ஆப்கானிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுப்பதற்காகவே ஏஆர்பி (ARAP) திட்டம் உருவாக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின்போது (Second World War) பிரான்சில் சிக்கியிருந்த 338,000 பிரிட்டன் மற்றும் நட்பு நாடுகளின் வீரர்களை காப்பாற்றிய நடவடிக்கை டன்கிர்க் (Operation Dunkirk) போல நடவடிக்கை பிட்டிங் (Operation Pitting) இருந்தது என்று சர் பென் மேலும் கூறியுள்ளார்.

பெண்கள், குழந்தைகள் மற்றும் சிறுபான்மையினருக்கு அடைக்கலம் கொடுப்பதற்காக ஆப்கான் குடியுரிமையாளர்களின் மீள்குடியேற்ற திட்டத்தை (Afghan Citizens Resettlement Scheme) உருவாக்கினேன். உள்துறை அமைச்சகம் (Home Office) இரண்டையும் இணைக்க விரும்பியது. ஆனால் நான் அதை விரும்பவில்லை என்று சர் பென் கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு அமைப்பை நான் நம்பவில்லை. அதனால் நானே ஒரு குடிவரவு தரவுத்தளத்தை உருவாக்கினேன் என்று அவர் கூறியுள்ளார்.

🇦🇫ஆப்கானிஸ்தான் தரவு கசிவு
ஆப்கானிஸ்தானில் போரின்போது மேற்கத்திய படைகளுக்கு உதவிய 33,000 பேரின் பெயர்கள் ரோயல் மரைன் (Royal Marine) மூலம் ஏப்ரல் 2022 இல் இணையத்தில் பரவியது. இது தலிபான்களுக்கு உதவியாக இருந்தது.

இந்த தவறு ஆகஸ்ட் 2023 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 24,000 ஆப்கானிஸ்தான் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஏஆர்ஆர் (ARR) திட்டத்தின் கீழ் ரகசியமாக அடைக்கலம் வழங்கப்பட்டது.

தலிபான்களுக்கு எதிராக ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் சிறப்புப் படையினரும் இதில் அடங்குவர்.
தரவு கசிவால் பலர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தரவு கசிவுக்கு காரணம் யாரோ ஒருவர் வேலையை சரியாக செய்யாதது தான் என்று சர் பென் மேலும் கூறியுள்ளார்.

இந்த தவறு இரண்டு அரசாங்கங்களால் 683 நாட்கள் ரகசியமாக வைக்கப்பட்டது. இந்த ரகசியத்தை காக்க 2.41 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டது.

இதேவேளை ஆப்கானிஸ்தான் மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் எந்த தலிபானும் பிரிட்டனுக்கு வரவில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனுக்கு வருபவர்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். அந்த சோதனைகளில் தோல்வியடைந்தால் அவர்களுக்கு பிரிட்டனில் குடியேற அனுமதி வழங்கப்படாது என்று அந்த அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

செய்தித் தகவல் மூலம் – தி டெலிகிராப்.
Source – The Telegraph.

Recommended For You

About the Author: admin