மட்டக்களப்பு மாநகரின் வடிகான்கள் சம்மந்தமாக கேள்வி எழுப்பிய சாணக்கியன் எ ம் பி..!

மட்டக்களப்பு மாநகரின் வடிகான்கள் சம்மந்தமாக கேள்வி எழுப்பிய சாணக்கியன் எ ம் பி..!

அடிக்கடி வெள்ளத்தினால் சிரமத்தை எதிர்கொள்ளும் மட்டக்களப்பு மாநகரின் பராமரிப்பு இன்றிக் காணப்படும் வடிகான்கள் புனரமைக்கப்படுவதோடு தேவைப்படும் இடங்களில் புதிதாக அமைக்கப்படுமா..?
இன்றைய தினம் 19.06.2025 இடம்பெற்ற பாராளுமன்ற கேள்வி பதிலின் போது. நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சருக்கான கேள்விகள்.

அடிக்கடி வெள்ளத்தினால் பாதிக்கப்படும் மட்டக்களப்பு மாநகர சபைக்குரிய பிரதேசங்களிலும் அதனைச் சூழ உள்ள பிரதேசங்களிலும் புனரமைப்பு செய்யப்பட வேண்டி உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்பட வேண்டிய வடிகான் அமைப்புக்கள் பல காணப்படுகின்றன என்பதை அமைச்சர் அறிவாரா அவ்வாறெனில் ஏற்கனவே உள்ள வடிகால் அமைப்புகளை புனரமைக்கவும் மற்றும் புதிய வடிகால் அமைப்புகளை அமைப்பதற்கு எவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதனை இச்சபைக்கு அறிவிப்பாரா? என்று எனது கேள்வியானது காணப#Batticaloa

கடந்த அரசாங்கத்திலும் சரி, தற்போதைய அரசாங்கத்திலும் செய்த சாத்தியக்குறு ஆய்வில் தேவைப்படுகின்ற நிதி இல்லாமையால் இதனை செய்ய முடியாமல் போனது என கௌரவ அமைச்சர் வழங்கிய பதிலிலே அவர் கூறுகிறார், இதில் இரண்டு முன்மொழிவுகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்;;டுவர விரும்புகிறேன். மட்டக்களப்பு கல்லடி பகுதிக்கான மழைநீர் வடிகால் அமைப்புக்கான முதன்மைத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான மட்டக்களப்பு நகராட்சி மன்ற ஆலோசனை சேவைகள். லங்கா ஹைட்ராலிக் இன்ஸ்டிடியூட் லிமிடெட் டிசம்பர் 2014. அதேபோன்று இருதயபுரம் பிரதேசத்திற்கும் மையப்படுத்தி இன்னொரு முன்மொழிவு காணப்படுகிறது. அதையும் இன்று நான் இந்த சபைக்கு வழங்குகின்றேன். அந்த முன்மொழிவானது மட்டக்களப்பு இருதயபுரம் பகுதிக்கான வடிகால் திட்டத்தை தயாரித்தல். இது 21 ஆகஸ்ட் 2014 மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு இரண்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு உலக வங்கியின் நிதியின் ஊடாக இதனை செய்வதற்கான ஏற்பாடுகள் காணப்பட்டன.

கௌரவ அமைச்சர் அவர்களே, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் அதி கூடிய சனத்தொகை கொண்ட நீங்கள் கூறியதை போன்று ஒரு இலட்சத்து 40 ஆயிரம் பேரை கொண்ட பிரதேசம் என்ற அடிப்படையில் அதி கூடிய அளவு வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற பிரதேசம். மழை பெய்யும் போது மட்டக்கள்பு மாவட்டத்தில் சேகரிக்கப்படும் மழை நீரை விட, மத்திய மாகாணத்தில் இருந்து வரும் தண்ணீர் மட்டக்களப்பு மாநகர சபை ஊடாகவே கடலுக்குள் செல்ல வேண்டியுள்ளது. இதில் முக்கியமாக இருதயபுரம், ஜெயந்திபுரம், நாவற்குடா, நாவற்குடா கிழக்கு இவ்வாறான பிரதேசங்கள் ஊடாகவே இந்த தண்ணீர் கடலுக்குள் செல்ல வேண்டும். தற்போது மட்டக்களப்பு மாநகர சபையை வைத்து ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இந்த சாத்தியக்கூறு ஆய்வு உள்ளது. தயார்படுத்திய சாத்தியக்கூறு அறிக்கைக்கு நிதி போதாமையாலேயே இது செய்ய முடியாமல் போனது என கௌரவ அமைச்சர் கூறினார். தற்போது இந்த மாநகர சபை ஊடாக 2025ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் பத்தாம் மாதம் பெய்கின்ற மழைக்கு முழு மாநகர சபையும் தாழ்ந்து போகக்கூடிய சூழல் உள்ளது. எனவே இந்த வருடத்தில் இக்காண்களை அமைப்பதற்கு அல்லது காண்களை துப்புறவுபடுத்துவதற்கு விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஏதேனும் வழிகள் உள்ளனவா?
எதிர்காலத்தில் இதனை அமைச்சில் முன்வைத்து தேவையான நிதியை பெற்று இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
அமைச்சின் உள்ள நிதியை வைத்து செய்ய முடியுமா என்பதே எனது கேள்;வி. எதிர்காலத்தில் நிதியை திரட்டி செய்யலாம் என்று கூறுவதை விடுத்து மாநகர சபை இருக்கின்றது ஆகக் குறைந்தது இந்த வருடத்தில் ஏனும் நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்கிறோம் என கூற வேண்டும். எதிர்காலத்தில் பார்ப்போம் என்ற பதில் எமக்கு போதுமானது அல்ல.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பிரதானமான பிரச்சினை என்ன என்றால் வீதி அபிவிருத்திகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் வடிகான்கள் அமைக்கப்படவில்லை. வடிகான் அமைப்பது தொடர்பில் மாநகர சபைக்குள் அதற்கான வளங்கள் அனைத்தும் உள்ளன. எங்களது மட்டக்களப்பு மாநகர சபையில் ஒரு ஊழலற்ற சிறந்த ஒரு முதல்வர் சிவன் பாக்கியநாதன், பிரதி முதல்வர் தினேஸ்குமார் ஆகியோரது தலைமையில் இந்த வடிகான் அமைப்பதற்கு ஏனும் ஒரு நிதி ஒதுக்கீடு உங்களது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் குறைந்தது 63 மில்லியன் ரூபாயாவது ஒரு சில வடிகான்களை அமைப்பதற்கு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் ஊடாக உங்களது அமைச்சின் ஊடாக ஒதுக்கலாமா?

இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதி இருப்பு இல்லை. எனவே இந்த வருடத்தில் செய்ய முடியாது. எனவே அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இது தொடர்பில் கவனத்தில் கொள்ள முடியும்

Recommended For You

About the Author: admin