வடக்கு மாகாண வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்!

வடக்கு மாகாண வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்!

வடக்கு மாகாண வரலாற்றில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026 (Northern Investment Summit – NIS26)” இன்று யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் மிகப் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.

‘தி மனேஜ்மென்ட் கிளப் (TMC) – இலங்கை’ அமைப்பின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இந்த உச்சிமாநாடு, வடக்கு மாகாணத்தின் முதலீட்டு வாய்ப்புகள், தொழில்துறை வளர்ச்சி மற்றும் தொழில் முயற்சியாண்மையை உலகிற்கு எடுத்துச் செல்லும் முக்கியமான மேடையாக அமைந்துள்ளது.

இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் தோழர்
சுனில் ஹந்துன்நெத்தி, நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் க. இளங்குமரன் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்களுடன் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

மேலும், இலங்கைக்கான பிரிட்டன் மற்றும் மலேசிய உயர்ஸ்தானிகர்கள், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரல், தென்னிந்தியாவுக்கான இலங்கையின் பிரதித் தூதுவர், பிரதமரின் செயலாளர், இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, தேசிய தொழில் முயற்சி அதிகார சபை ஆகியவற்றின் தலைவர்கள், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.

வடக்கு மாகாணத்தின் வளங்களை மதிப்பூட்டிய உற்பத்தி, தொழில்துறை முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் மூலம், நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நாம் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய காலம் இதுவாகும்.
வடக்கின் வளர்ச்சிக்கான இந்த முயற்சி வெற்றியடைய அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்.

Recommended For You

About the Author: admin