ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருக்கும். அந்த பிரச்சனையிலிருந்து வெளியே வருவதற்கு அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
என்ன தான் முயற்சிகள் செய்தாலும் ஒரு சிலருக்கு ஒரு சில பிரச்சினைகள் மட்டும் தீராமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு செய்ய வேண்டிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பிரச்சனைகளை தீர்க்கும் பரிகாரம்
ஒருவருடைய வாழ்க்கையில் பிரச்சனை இருக்கிறது என்றால் அந்த பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக அவரிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலே திகழ்கிறது. அதனால் ஒரு பிரச்சனை தீர வேண்டும் என்றால் முதலில் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நாம் விலக்க வேண்டும்.
நம்மிடம் மட்டும் இல்லாமல் நம் வீட்டிலும் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை அவ்வப்பொழுது நாம் நீக்கிக் கொண்டே வந்தோம் என்றால் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும் அந்தப் பிரச்சினை தீர்வதற்குரிய வழி நமக்கு கிடைக்கும். மேலும் நாம் செய்யக்கூடிய முயற்சிகளில் வெற்றிகளும் உண்டாகும்.
அந்த வகையில் இந்த பரிகாரத்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன் நாம் செய்ய வேண்டும். எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்குவதற்கு பலவிதமான பொருட்கள் இருக்கின்றன.
அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக திகழ்வதுதான் கல் உப்பு. கல் உப்பு எப்படி மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக திகழ்கிறதோ, அதே போல் தான் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது. அதனால் இந்த பரிகாரத்திற்கு நமக்கு கல் உப்பு கண்டிப்பான முறையில் வேண்டும். அடுத்ததாக இரண்டு கிராம்பு வேண்டும்.
ஒரு கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பா ஒன்று வேண்டும். இரவு அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு படுக்கச் செல்வதற்கு முன்பாக ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து உங்களுடைய வாழ்க்கையில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் வரிசையாக எழுதிக் கொள்ளுங்கள். கருப்பு நிற மையை மட்டும் பயன்படுத்த வேண்டாம். இப்பொழுது இந்த பேப்பரை மடித்து நாம் எடுத்து வைத்திருக்கும் கண்ணாடி டப்பாவிற்குள் வைத்து விட வேண்டும்.
பிறகு அந்த கண்ணாடி டப்பா மூழ்கும் வரை கல்லுப்பை போட வேண்டும். அதற்குமேல் இரண்டே இரண்டு மொட்டு உடையாத கிராம்பை வைத்து விடுங்கள். எந்த இடத்தில் நீங்கள் படுத்து உறங்க போகிறீர்களோ அந்த அறையின் ஏதாவது ஒரு மூலையில் இதை அப்படியே வைத்து விட வேண்டும்.
மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இதில் இருக்கக்கூடிய இரண்டு கிராம்பை எடுத்து கற்பூரத்தை வைத்து முற்றிலும் எரித்து சாம்பலாக்க வேண்டும். இதில் இருக்கக்கூடிய கல் உப்பை சமையலறையில் இருக்கக்கூடிய சிங்கில் போட்டு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்து விட வேண்டும். பிரச்சினைகளை எழுதி வைத்திருக்கும் பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதேபோல் எரித்த கிராம்பின் சாம்பலையும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். கால் படாத இடமாக ஏதாவது ஒரு மரத்தின் அடியில் சற்று ஆழமாக பள்ளத்தைத் தோண்டி முதலில் நாம் எழுதிய பேப்பரை வைத்து சிறிதளவு மண்ணைப் போட்டு மூடி விடுங்கள்.
அதற்கு மேல் இந்த கிராம்பு சாம்பலை போட்டு அதையும் மண்ணை போட்டு மூடி விடுங்கள். இப்படி நாம் பரிகாரம் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும். எப்படி அந்த பேப்பர் மண்ணில் மக்கி ஒன்றும் இல்லாமல் போகிறதோ அதே போல் படிப்படியாக நம்முடைய பிரச்சனைகளும் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.
முழு நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

