இன்று பணகஷ்டம் இல்லாத மனிதர்களே இல்லை. சராசரியாக பெரும்பாலானவர்கள் பண கஷ்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்.
விலைவாசி உயர்வும், வறுமையும் நிறைய இடங்களில் பரவி இருக்கிறது. ஒரு சிலருக்கு அளவுக்கு அதிகமாக செல்வ செழிப்பு இருந்தாலும், ஒரு சிலர் அளவுக்கு அதிகமான வறுமையில் பணக்கஷ்டத்தில் தான் இருக்கிறார்கள். கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறார்கள்.
இந்த ஏற்றத்தாழ்வு எதனால் என்று சிந்திப்பதை விட, இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய பணக்கஷ்டத்திலிருந்து விடுபட வறுமையை விரட்டி அடிக்க என்ன செய்வது என்று சிந்திக்கலாம். முருகப்பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமை இரவு இந்த பரிகாரத்தை செய்ய துவங்குங்கள்.
அடுத்த செவ்வாய்க்கிழமை வருவதற்குள் உங்களுடைய பெரிய பண கஷ்டம் ஒன்று தீருவதற்கு நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. இது அந்த முருகப்பெருமானை நினைத்து செய்யக்கூடிய எளிய பரிகாரம்.
பண கஷ்டம் தீர்க்கும் பரிகாரம்
ஒரு மஞ்சள் நிற கவர் எடுத்துக் கொள்ளுங்கள். மொய் கவராக இருந்தாலும் பரவாயில்லை. அதை பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம். மஞ்சள் நிற கவருக்கு உள்ளே 9, ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து விடுங்கள். அந்த கவருக்கு மேலே “897” என்ற நம்பரை பிங்க் நிற பேனா அல்லது சிவப்பு நிற பேனாவால் எழுத வேண்டும்.
செவ்வாய்க்கிழமை இரவு உறங்க செல்வதற்கு முன்பு இந்த கவரை எடுத்து இரண்டு கண்களில் ஒற்றிக் கொள்ளுங்கள். குலதெய்வத்தையும் முருகனையும் மனதார நினைத்து உங்களுடைய பண கஷ்டம் கூடிய விரைவில் தீர போகிறது என்ற சந்தோஷத்துடன் தூங்க செல்லவும். மறுநாள் காலை அந்த கவரை எடுத்து அலமாரியில் வைத்து விட வேண்டும்.
மீண்டும் புதன் இரவு, வியாழன் இரவு, இதுபோல அடுத்த செவ்வாய் கிழமை இரவு வரை இந்த கவரை எடுத்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். இந்த பரிகாரத்தை துவங்கிய செவ்வாய்க்கிழமை இரவு முதல், அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு வரை நீங்கள் கொஞ்சம் சுத்தபத்தமாக இருந்து கொள்ளுங்கள்.
வீட்டில் இருக்கும் குடும்ப தலைவி, குடும்ப தலைவன் யார் வேண்டுமென்றாலும் பரிகாரத்தை செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கூட, இந்த பரிகாரத்தை செய்யலாம். தினமும் தூங்குவதற்கு முன்பு இந்த கவரை கண்களில் ஒற்றிக்கொண்டு தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.
குலதெய்வத்தையும் முருகப்பெருமானையும் மனதார வேண்டிக் கொண்டு உங்கள் பண கஷ்டம் தீர்ந்தது என்ற நம்பிக்கையோடு தூங்க வேண்டும். இவ்வளவுதான் பரிகாரமே. இந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த பரிகாரத்தை செய்ய துவங்கினால், அடுத்த செவ்வாய் கிழமை இரவு இந்த பரிகாரத்தை நிறைவு செய்த வேண்டும்.
புதன்கிழமை காலை குளித்து முடித்துவிட்டு உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று இந்த நாணயங்களை உண்டியலில் போட்டு விடுங்கள். அந்த கவரில் கொஞ்சம் பணம் போட்டு பீரோவில் வைக்கலாம். அப்படி உங்களுக்கு அந்த கவர் தேவைப்படவில்லை என்றால் அந்த கவரை இரண்டாக கிழித்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.
இந்த பரிகாரம் பணத்தை ஈர்க்கக்கூடிய சூட்சமமான பரிகாரம். நம்பிக்கை இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள். பெரிய பண கஷ்டத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு ஒரு விடுதலையை கொடுக்கக்கூடிய சக்தி இந்த பரிகாரத்திற்குள் அடக்கம் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

