அபிஷேகங்களால் மனம் குளிரும் இறைவன் வேண்டிய வரங்களை நமக்கு அள்ளித் தருவதாக வேத சாஸ்திரங்கள் கூறுகிறது. நம் வீட்டு நிலை வாசலில் காலையில் பால் காய்ச்சும் பொழுது, இந்த விஷயத்தை செய்து வந்தால் நிலை வாசலில் தங்கி இருக்கக்கூடிய தெய்வங்களின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
காலையில் பால் காய்ச்சும் பொழுது நிலை வாசலில் நாம் செய்ய வேண்டியது என்ன? என்னும் சுவாரசியமான ஆன்மீகம் சார்ந்த தகவலை இந்த பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
நிலை வாசலில் பொதுவாகவே குலதெய்வ வாசம் உண்டு. அதனால் தான் வாசல் கதவை அல்லது அதனுடைய தாழ்பாளை எப்பொழுதும் ஆட்டக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். அதுபோல தலைவாசல் என்பது கிரக தேவதைகள் வாசம் செய்யும் இடமாகவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த தேவதைகள் அந்த வீட்டின் செழிப்பிற்கு காரணமாகவும், ஆதாரமாகவும் இருக்கின்றன. இவர்களை மகிழ்ச்சி படுத்துவது தான் நம்முடைய செழிப்புக்கு காரணமாக அமைகிறது.
நிலை வாசலில் மஞ்சள், குங்குமம் வைப்பவர்கள் இல்லத்தில் எப்பொழுதும் சுபிட்சம் இருக்கும். மகாலட்சுமியின் கடைக்கண் பார்வையும் முதலில் நிலை வாசலில் தான் விழுகும். நிலைவாசலில் தீபம் ஏற்றி வைப்பதும் இதனால் தான். குலதெய்வ அருளும், கிரக தேவதைகளின் ஆசியும் கிடைப்பதற்கு எப்பொழுதும் மஞ்சள், குங்குமத்துடன் விளக்கு ஏற்றி வையுங்கள்.
அங்கு உதிரிப்பூக்களை அல்லது மலர்களை வைப்பதும் அவர்களின் அருளாசியை பெற்றுக் கொடுக்கும். காலையில் எழுந்ததுமே முதல் வேலையாக நாம் பால் காய்ச்சுவது தான் சமையலறையில் வழக்கம்.
பாலை காய்ச்சிய பின்பு அதிலிருந்து முதல் பாலை ஒரு டம்ளர் அளவிற்கு பூஜை அறையில் வைத்து பின்பு மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் நம் வீட்டில் இருக்கும் தெய்வங்களுக்கும் பசியாற்றுகின்றோம் என்கிற நற்பலன் கிடைக்கிறது. அதுபோல காய்ச்சிய பாலில் இருந்து ஒரு டீஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
நிலை வாசலில் இரு புறங்களிலும் சில பால் சொட்டுகளை விடுங்கள். இது நிலை வாசலுக்கு பாலபிஷேகம் செய்யும் முறையாகும். காலையிலேயே எழுந்து குளித்து முடித்து சமையலறையில் பாலை காய்ச்சி, பாலை பூஜை அறையில் வைத்து விட்டு, பின்பு பாலை நிலை வாசலில் இப்படி அபிஷேகம் செய்வது போல செய்து, இறைவனை பிரார்த்தித்துக் கொண்டால் நிலை வாசலில் குடி கொண்டு இருக்கும் நம் குலதெய்வம் மனம் குளிர்ந்து நல்லாசிகளை வழங்குவார்கள்.
இதை செய்வதால் கிரக தேவதைகள் நிலை வாசலில் இருந்து நம்மை வாழ்த்துவார்கள். இதனால் நாம் வேண்டிய வேண்டுதல்களும், நம் குடும்ப கஷ்டமும் தீர்ந்து செல்வ செழிப்புடன் இருக்கும் என்பது நம்பிக்கை. அது மட்டுமல்லாமல் குடும்பத்தில் இருக்கும் கெட்ட சக்திகளும், தீவினைகளும் விலகி ஓடுவதற்கு காய்ச்சிய பாலில் இருந்து சில சொட்டுக்களை சூடான தோசை கல்லில் தெளித்து விடுங்கள்.
அப்பால் அடுப்பில் நெருப்பில் ஆவி ஆகிவிடும். இப்படி செய்வதால் குடும்பத்தில் இருக்கும் செய்வினைகள், தீவினைகள், கெட்ட சக்திகள் எதுவாக இருந்தாலும் அது நம்மை விட்டு விலகி ஓடிவிடும் என்பதை நம்பிக்கை. இதை தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மாதம் ஒருமுறை அல்லது இருமுறை செய்யுங்கள் போதும்.

