ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர்

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்த மல்ஷானின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (27.04.2025) பண்டாரகம (Bandaragama) காவல்துறை பிரிவில் வைத்து நடைபெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “கைது செய்யப்பட்ட குறித்த நபரின் வீட்டைச் சோதனையிடும் ​போது ரிவோல்வர், பெருந்தொகையான T56 துப்பாக்கி ரவைகள், கூர்மையான வாள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், தற்போதைக்குத் தலைமறைவாகி இருக்கும் பிரபல பாதாள உலக குழுவை சேர்ந்த குடு சலிந்துவின் உதவியாளர் என்பது தெரிய வந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பண்டாரகமை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin