தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இணுவில் கிழக்கைச் சேர்ந்த நிவேதனன் விஜிதா (வயது 30) என்ற இளம் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை வீட்டில் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீயில் எரிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை (28) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம் மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டார் சாட்சிகளை சுன்னாகம் பொலிசார் நெறிப்படுத்தினர்.

Recommended For You

About the Author: admin