டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை-இரு பெண்கள் கைது

டொன் பிரியசாத் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இதுவரை 7 பேரை கைதுசெய்து தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர், டொன் பிரியசாத் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு மீதொட்டமுல்லையிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்தக் கொலைச்சம்பவத்துடன் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் இதுவரை இரு பெண்கள் உள்ளிட்ட 7 பேரை பொலிஸார் கைதுசெய்து தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை டான் பிரியசாத் கொலை வழக்கில் தந்தை மற்றும் மகன் ஆகிய இரு சந்தேக நபர்கள் நாட்டை விட்டு வெளியேற கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன ககுனவெல நேற்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பந்துல பியால் மற்றும் அவரது மகன் மாதவ சுதர்ஷன ஆகியோருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin